டிரெண்டிங்கில் ரஜினியின் ’தர்பார்’ பாடல்!

slider சினிமா

நடிகர் ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘தர்பார்’. இதில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட பெரும் வரவேற்பை பெற்றது. இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள ஒரு ஓபனிங் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ’சும்மா கிழி’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் யூடியூபில் டிரெண்ட் ஆகி வருகிறது.  இப்படத்தின்  ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி டிசம்பர் 7-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.