ஜோதிகா, கார்த்தி நடித்துள்ள  ’தம்பி’ படம் அடுத்த மாதம் ரிலீஸ்!

slider சினிமா

நடிகை ஜோதிகா அக்காவாகவும், நடிகர் கார்த்தி தம்பியாகவும் நடித்திருக்கும் படம் ‘தம்பி’. இதில் அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.  ‘96’ படத்தின் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் நவம்பர் 30-ம் தேதி ’தம்பி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும், டிசம்பர் 20-ம் தேதியன்று ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் இதற்குமுன் ’தொரட்டி’, ’திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, ’காவியன்’ ஆகிய படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கார்த்தி நடித்த ‘கைதி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்த மாதம் ‘தம்பி’ படம் வெளியாகவிருப்பதால், கார்த்தி ரசிகர்களிடம் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.