மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி?

slider சினிமா
vijay-sethupathy-விஜய்-சேதுபதி

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி,  ‘ஏற்கனவே கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாகவும் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நடிப்பேன்’ என்றும் பேசியிருந்தார்.

இதனையடுத்து  ‘இந்தியன்-2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால், படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரை இமேஜ் பார்க்காமல் இரண்டு கதாநாயகர்கள் படங்களில் நடித்து வரும் பழக்கம் உடையவர். மாதவனின்  ‘விக்ரம் வேதா’, ரஜினியின்  ‘பேட்ட’ படங்களில் வில்லனாகவும் வந்துள்ளார். ஆகவே,  ‘இந்தியன் – 2’ படத்தில் வில்லனாகவே அல்லது கதைக்கு தேவைப்படும் சின்ன கதாபாத்திரமாகவே கிடைத்தாலும் நடிக்கக் கூடியவர்தான். இது குறித்த விபரம் சரியாக என்னவென்று இன்னும் சில நாள்களில் தெரிய வரலாம்.