சிவகார்த்திகேயனின் தடை நீங்கியது!

slider சினிமா
hero-sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்துக்கு அடுத்து இயக்குநர் மித்ரன் இயக்கத்தில்  ‘ஹீரோ’ படத்தில் நடித்துள்ளார். இதில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள்  தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மேலும், இந்தப் படத்துக்காக வித்தியாசமான புரமொஷனில் களமிறங்கியுள்ள  ‘ஹீரோ’ படக்குழு பிரத்யேக வீடியோ கேம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த படத்துக்கு ஃபைனாஸ் செய்தது சம்பந்தமாக விவகாரம் கோர்ட் வரை சென்றது.  இதையடுத்து  ‘ஹீரோ’ படத்துக்கு கோர்ட்டு தடை விதித்தது.  இந்த கடன் பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.   தற்போது இதில் சுமூக முடிவு ஏற்பட்டுள்ளதாம்.

இது குறித்து தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “டி.எஸ்.ஆர். பட நிறுவனத்திடம் பேசி  ‘ஹீரோ’ படம் சம்பந்தமான சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.   டிசம்பர் 20-ம் தேதி  ‘ஹீரோ’ படம் திரைக்கு வரும். இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறது.