நான் எவ்வளவு காலம் என்று தெரியாது – சாய் பல்லவி!

slider சினிமா
saipallavri-சாய்பல்லவி

தமிழில் தனுஷுடன்  ‘மாரி – 2’ படத்தில் ஜோடியாக நடித்த சாய் பல்லவிக்கு அந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘’ரவுடி .. பேபி’’ பாடல் பெரிய அளவுக்கு ஹிட் ஆனதால், தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பு மட்டுமல்ல இவரது பேச்சும் வித்தியாசமாகவும், யோசிக்கவைக்கும் வகையில் இருக்கும்.

சமீபத்தில் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்தார். அதில்,  ‘’வாழ்க்கையில் நினைத்தது நடக்காமல் போனாலோ அல்லது செய்த வேலைக்கு எதிர்மறையான பலன்கள் கிடைத்தாலோ நிராசைக்கு ஆளாவது உண்டு. நான் அதை வேறு கோணத்தில் பார்ப்பேன். ஏதாவது நடக்க வேண்டும் என்று எழுதி இருந்தால், அதை யாராலும் தடுக்க முடியாது. எந்த மாதிரி பிரச்னை வந்தாலும் அதில் இருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று சோர்ந்து போகக் கூடாது. படிக்கிற காலத்திலேயே எது வந்தாலும் இது நம் நல்லதுக்குத்தான் நடந்து இருக்கிறது என்று நினைப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக்கொண்டேன். அந்த பழக்கம் இப்போது சினிமா துறையில் எனக்கு உதவியாக இருக்கிறது. இங்கேயும் ஏதாவது தவறு நடந்தால் நமக்கு கற்றுக்கொடுக்கத்தான் நடந்து இருக்கிறது என்று நினைப்பேன். சினிமாவில் நடிகையாக இருப்பது குறுகிய காலம்தான். நான் எவ்வளவு காலம் நடிப்பேன் என்று தெரியாது. ஆனால், நடிக்கிற காலத்தில் ஒவ்வொரு புதுமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்’’ என்று கூறியுள்ளார்.