நடிகை பிரியா பவானி சங்கர் கேரக்டர்?

slider சினிமா
Priya-Bhavani-Shankar-பிரியா-பவானி-சங்கர்

கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும்  ‘இந்தியன்- 2’ படத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் வந்து கொண்டிருந்து. இப்போது வந்துள்ள புது தகவலில் கமல் இந்தப் படத்தில் சில காட்சிகளில் குஜராத்தி மொழி பேசுகிறாராம். சில காட்சிகள் என்றாலும், அதற்காக குஜராத்தி மொழியையும் ஓரளவு பேச பயிற்சி எடுத்தே அந்த காட்சிகளில் நடிக்கிறாராம் கமல்.

இன்னொரு புதுத் தகவலில் பிரியா பவானி சங்கர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதுபற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் சேனாதிபதியின் மனைவியாக சுகன்யா நடித்திருந்தார். இவரது வேடத்தில் தான் பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளாராம். படம் ரிலீஸாகி பார்ப்பதற்குள் இன்னும் என்னென்ன புது தகவல்கள் வரப் போகிறதோ?