விரதம் இருக்கும் நயன்தாரா!

slider சினிமா
nayanthara – நயன்தாரா

சமீபமாக தமிழ் சினிமாவில் பேய் டிரெண்ட் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்திலும், நடிப்பிலும் ‘மூக்குத்தி அம்மன்’ என்கிற கடவுள் பக்தியை முக்கியமாக கொண்ட ஒரு படம் உருவாகிறது. இதில் மூக்குத்தி அம்மனாக நடிப்பவர் நயன்தாரா. இதனால் இந்தப் படத்துக்கு இப்போதே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி கூறும்போது, “நானும் ரவுடிதான் படத்தில் இருந்தே நயன்தாரா எனக்கு நல்ல நண்பர். இந்த படம் தொடர்பாக ஒரு நாள் மாலை வேலையில் அவரை சந்தித்து அரை மணிநேரம் இந்தக் கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்துபோக உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார். இது முழுக்க முழுக்க பக்திப் படம். சமீப காலமாக தொடர்ந்து பேய் படங்களாக வருகிறது. சாமி படங்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகிறது. நான் சாமி நம்பிiக்கை உடையவன் அதனால் இந்த படம் எடுக்க முடிவு செய்தேன். இந்த படத்தில் ஒரு செய்தியையும் நான் சொல்லவிருக்கிறேன். இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்துக்கொடுப்பதாக தெரிவித்தார். படம் தொடங்கவிருக்கிறது. இப்போதே படக்குழுவினர் பயபக்தியோடு அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவிற்கு மாறிவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பவானி அம்மனின் இன்னொரு பெயர் ‘மூக்குத்தி அம்மன்’ அதனால் இந்த பெயரை வைத்தேன்” என்று கூறியுள்ளார்.