மீண்டும் கால்பந்து வீரராக யோகிபாபு!

slider சினிமா
jada-yogi babu with kathir

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு பிறகு, கதிர் ஹீரோவாக நடித்துள்ள படம்  ‘ஜடா’. தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யோகி பாபுக்கு முக்கிய வேடமாம். ஏற்கெனவே வெளியான  ‘பப்பி’ மற்றும்  ‘பிகில்’ படங்களில் கால்பந்து வீரராக நடித்திருந்தார் யோகிபாபு. அதேபோன்று  ஜடாவிலும் யோகிபாபு கால்பந்து வீரராக நடிக்கிறார். கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவானாக திகழும் மெஸ்சி எனும் பெயரில் யோகிபாபு நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் 6-ம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.