சந்தானத்துடன் டிக்கிலோனா ஆடப்போகும் ஹர்பஜன்சிங்

slider சினிமா

 

dikkilona-டிக்கிலோனா

நடிகர் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவுள்ள படம் ‘டிக்கிலோனா.’ இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.  பெரும் பட்ஜெட்டில் தயாராகவுள்ள இந்தப் படத்தில் சந்தானத்தோடு  இந்திய கிரிக்கெட் பிரபல ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் இருவரும் நடிக்கின்றனர்.  மேலும், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

‘டிக்கிலோனா’ படத்தைப் பொறுத்தவரை   முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளதாம். இன்று (18.11.2019) இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் தயாரிக்கின்றனர். பூஜையைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு அடுத்த ஏப்ரல் மாதத்துக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.