மீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால்!

slider சினிமா
chakra-சக்ரா

தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘ஆக்‌ஷன்’ படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படத்திலும் அவருக்கு ராணுவ அதிகாரி கதாபாத்திரம் தான்.

 

எம்.எஸ். ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தை விஷால் தான் தயாரிக்கிறார். இதுவரை எழுபத்தைந்து சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்போது தான் இந்த படத்துக்கான தலைப்பு வெளியாகியுள்ளது. ‘சக்ரா’ இதுதான் இந்தப் படத்தின் தலைப்பு. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோருடன் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு  ‘சக்ரா’வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தேசப்பற்று, குடும்ப சென்டிமென்ட், அதிரடி ஆகியவை அடங்கிய தொழில்நுட்ப திகில் படமாக  தயாராகி வரும்  ‘சக்ரா’ அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.