எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி!

slider சினிமா
arvindsamy-அரவிந்த்சாமி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘தலைவி’. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஏ.எல். விஜய்  இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார்.

எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கவுள்ள அரவிந்த்சாமி தனது தோற்றத்தை மீசையில்லாமல் எம்.ஜி.ஆர். போலவே மாற்றியுள்ள அவரது புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்துக்கான திரைக்கதையை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.  பிரமாண்ட வெற்றிப் படமான  ‘பாகுபலி’ படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதியிருந்தார்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.