வடிவேலுக்கு மீண்டும் சிக்கல்!

slider சினிமா

 

vadivel-வடிவேல்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படப்பிடிப்புக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்காததால், அந்த விவகாரம் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் வரை சென்று பஞ்சாயத்து ஆனது. இதனைத் தொடர்ந்து அவர் வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின்   ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில்  ‘தேவர் மகன்’ படத்தின் இசக்கி கதாபாத்திரத்தில் வடிவேலு மீண்டும் நடிப்பார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், மற்றொரு சிக்கலும் வடிவேலுக்கு ஏற்பட்டுள்ளது. நடிகரும், தொழிலதிபருமான ஆர்.கே. தற்போது நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.  அது என்னவென்றால்,     ‘நானும் நீயும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் வழங்கினோம். ஆனால், அவர்  இந்தப் படத்தில் நடிக்க சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் தாமதப்படுத்தினார்.  ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலு நடித்துக் கொள்ளட்டும். ஆனால், நாங்கள் தந்த  ஒரு கோடி ரூபாயைத் திருப்பித் தராமல் அந்த திரைப்படத்தை வெளியிட முடியாது’ என்று ஆர்.கே. தனது புகாரில் குறிப்பிட்டுள்ளாராம்.