நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல்!

slider சினிமா
ishariganesh-ஐசரி கணேஷ்

சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஷால் அணியிலுள்ள நடிகர் கார்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழக அரசு தனி அதிகாரி நியமித்த விவகாரத்தில் விஷால் அணியை எதிர்த்து புதிய அணி உருவாக்கி செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ்தான் காரணம் என்கிற தகவல் வெளியாகி பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டுத் துறை மையம் இணைந்து ஆண்டுதோறும் நவம்பர் 13-ம் தேதியன்று சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த வருஷம் அந்த நிகழ்ச்சி நேற்று (13-ம் தேதி) புதுவையில் நடத்தப்பட்டது. இதில் ஐசரி கணேஷ் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஐசரி கணேஷ் பேசும்போது, ‘’நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பது எங்கள் புகார். தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன்.  ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது. இந்த படம் திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி வெளியாகும்’’ என்று குறினார்.

ஏற்கெனவே தமிழக அரசுக்கு மிகவும் வேண்டியவராக ஐசரி கணேஷ் இருப்பதனால்தான் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற பேச்சு நிலவிவரும் நிலையில், இப்போது  நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் வரும் என்று ஐசரி கணேஷ் சொல்லியிருப்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் என்கிற விவாதம் திரையுலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.