சூர்யா – இயக்குநர் ஹரி மீண்டும் கூட்டணி

slider சினிமா

 

surya – hari – சூர்யா – ஹரி

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணி மிகவும் பிரபலமானது. இவர்களின் கூட்டணியில் வந்த ’ஆறு’,  ‘வேல்’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. 2010-ம் ஆண்டில் மீண்டும் இவர்கள் கூட்டணியில் ’சிங்கம்’ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.  இதன்பிறகு ’சிங்கம்’ படத்தின் 2-ம் பாகம்  2013-ம் ஆண்டும், சிங்கம் 3-ம் பாகம் 2017-ம் ஆண்டும் வெளியாகி வெற்றி பெற்றன.

தற்போது மீண்டும் சூர்யா- ஹரி கூட்டணியில் விரைவில் அடுத்த படம் தயாராகவுள்ளது. இது சிங்கம்
4-ம் பாகமா? அல்லது வேறு கதையா? என்பது இன்னும் முடிவாகவில்லையாம். ஆனால், ஒன்று முடிவாகவிட்டது. இவர்கள் கூட்டணியில் முதல் முறையாக,  பிரபல இசையமைப்பாளர் இமான் இணைந்துள்ளார்.