அடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்?!

slider சினிமா
nayanthara-vigneshsivan

தென்னிந்திய மொழிப் படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். இவர் நடிகர் விஜய்யுடன் நடித்த ‘பிகில்’ படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையான ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனது சொந்த வாழ்க்கையில் நயன்தாரா ஏற்கெனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்துள்ளார். இப்போது மூன்றாவது முறையாக தமிழ் சினிமா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள். 2019 டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக  இவர்களுக்கு நெருக்கமான தரப்பினரிடமிருந்து தகவல் கசிந்திருக்கிறது.

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், தற்போது கைவசம் உள்ள படங்களை விரைவாக முடித்து கொடுக்க நயன்தாரா அவசரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் திருப்பதி சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பியபோது நயன்தாராவிடம் உங்கள் திருமணம் எப்போது? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் சொல்லாமல் சிரித்தபடி நழுவினார் நயன்தாரா.

நயன்தாராவின் திருமணத் தகவலை பொறுத்தவரை அது உறுதிப்படுவது எப்போது என்றால், அவர் திருமண காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகும்போது என்கிற குரலும் கோலிவுட்டில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.