வைரமுத்துவுடன் மீண்டும் சின்மயி மோதல்

slider கலை சினிமா

 

Chinmayi-சின்மயி

தமிழகளவில் பெண்களுக்காக களமிறங்கிய ‘மீ டூ’ மூலம் பிரபலமானவர் பாடகர் சின்மயி. குறிப்பாக, இவர் பாடலாசிரியர் வைரமுத்து மேல் வைத்த பாலியல் புகார், பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் இடையில் கொஞ்சகாலம் அடங்கியிருந்தது. இப்போது மீண்டும் வெடித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் தனது ராஜ்கமல் அலுவலகத்தில் தனது குருவான கே.பி.பாலசந்தருக்கு சிலையமைத்து திறப்பு விழா நடத்தினார். இதில் நடிகர் ரஜினியுடன், பாடலாசிரியர் வைரமுத்துவும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராமில் பாடகர் சின்மயி, ‘நான் இங்கே குறிப்பிடுவது வைரமுத்துவை. ஒரு மனிதன் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவனது வாழ்க்கையே அழிந்துவிடும். முகத்தை வெளியே தலைக்காட்ட முடியாது. அப்படிப்பட்ட குற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல தி.மு.க. நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக  கலந்து கொண்டார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணான நான் தடை செய்யப்பட்டேன். இது தான் தமிழ் சினிமாவில் உள்ள பெரியவர்களால் எனக்கு வழங்கப்பட்ட நீதி’என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அதே டுவிட்டரில்,  ‘பாலியல் குற்றவாளிகள் பொதுமேடையில் தங்கள் இமேஜை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். இவர்களை நினைத்தால் பயமாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார். சின்மயின் இந்த ட்விட்டர் விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஆரம்பித்துள்ளது.