பாலிவுட் ஹீரோவை வியக்கவைத்த சூர்யா!

slider சினிமா
sooraraipottru-சூரரை போற்று

சுதா கொங்கரா டைரக்‌ஷனில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் ’சூரரை போற்று’! இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாம். இதற்காக பாலிவுட்டில் பேமஸான அன்பறிவ் மாஸ்டர்களை இந்தப் படத்துக்கு சண்டை மாஸ்டர்களாக களம் இறக்கியுள்ளார் இயக்குநர்.

ஏற்கெனவே பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களோடு பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் அன்பறிவ் மாஸ்டர்கள். அவர்களே இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சூர்யாவின் பங்களிப்பு குறித்து ரொம்பவே வியந்து போனார்களாம். இந்தப் படத்தில் அமைக்கப்பட்ட சில சண்டைக் காட்சிகளை தற்போது இவர்கள் பணிபுரியும் பாலிவுட் படத்தின் ஹீரோ ஜான் ஆபிரகாமிடம் காட்டியபோது அன்பறிவை பாராட்டியதோடு, சூர்யாவின் சண்டை காட்சிகளைப் பார்த்து வியந்து போனாராம் ஜான் ஆபிரகாம்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைத் தளங்களில் சூர்யாவின் ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.