நடிகர் விஜய்தான் அடுத்த தமிழக முதல்வர் – பிரசாந்த் கிஷோர்

slider அரசியல்
prashant-kishor-பிரசாந்த் கிஷோர்

இந்திய அளவில் பிரபலமான அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் நம்பிக்கைக்குரிய டீம், ‘’நாங்க ஒரு சர்வே எடுத்தோம். நீங்கதான் அடுத்த முதல்வர்.  தைரியமா அரசிலுக்கு வாங்க. தமிழக மக்கள் ஆதரவு உங்களுக்குதான்” என்று நடிகர் விஜய்யிடம் கூறியுள்ளதாக பரபரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் கிஷோர் பற்றி சொல்ல வேண்டும் என்றால்,  2014 மற்றும் 2019 என்று பாராளுமன்றத் தேர்தல் மூலமாக  இரண்டுமுறை மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சியில் அமர்வதற்கு இவரது மற்றும் இவரது டீமின் அரசியல் வியூகங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. சமீபத்தில்கூட ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஆனதுக்கு பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டதும் இவரும், இவரது டீமூம் தான்.   இப்படிப்பட்டவரை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் சந்தித்து பேச ஆரம்பித்தனர்.

குறிப்பாக, 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க, பிரசாந்த் கிஷோரை நியமிக்க ஒப்பந்தம் வரை அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை சென்றதாகவும் தகவல்கள் வந்தன.

இதேபோல, பிரசாந்த் கிஷோரை கமல் போய் சந்தித்து பேசினார். இதன்பிறகு,  ம.நீ.ம. கட்சிக்காக பிரசாந்த் டீம் ஒருசில வேலைகளிலும் களம் இறங்கியது. ஆனால், கமல் கட்சியின் சில பொறுப்பாளர்களுக்கு இது திருப்திகரமாக இல்லை. அதனால், ம.நீ.ம. தொடர்பான விஷயங்களில் பிரசாந்த் டீமுக்கு ஆர்வம் காட்ட முடியாமல் போய்விட்டது.

தற்போது பிரசாந்த் கிஷோர் டீம் நடிகர் விஜய்யை தாங்களாகவே வலிய போய் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்க்கு நெருக்கமான ஒருவரை சந்தித்த அந்த டீம், “நாங்கள் ஒரு சர்வே எடுத்தோம். அந்த சர்வே முடிவில், 28 சதவித மக்களின் ஆதரவு விஜய்க்கு இருக்கிறது. அவர்தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்ற தமிழக மக்களே விரும்புகிறார்கள். அதனால் அடுத்த ஒரு வருஷத்துக்கான பிளான்களை நாங்கள் போட்டு தருகிறோம். அதை விஜய் ஃபாலோ செய்தால் போதும். அவர்தான் அடுத்த முதல்வர். தமிழக கள நிலவரமும் விஜய்க்கு சாதகமாத்தான் இருக்கிறது. அதனால் தைரியமாக அவர் அரசியலுக்கு வரலாம்.   ஆந்திராவில் இளமையான முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருக்கிறார். அவரது வெற்றிக்காக நாங்கள் வியூகங்களை வகுத்துக் கொடுத்தோம். அவரும் முதல்வராகிவிட்டார். அதேபோல், விஜய்க்கும் வயது இருக்கிறது. தமிழகத்தில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால், அவர் வந்தால் சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன” என்று விளக்கமாக எடுத்து சொன்னதாம். இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்ட விஜய்க்கு நெருக்கமான அந்த நபர் எந்தப் பதிலும் சொல்லவில்லையாம்.

நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் சந்திரசேகருக்கு   மகனின் முதல்வர் கனவு நீண்ட வருடமாகவே இருந்து வருகிறது. தற்போது இந்த வயதில் இறங்குவதுதான் அதிரடியாகவும், சரியாகவும் இருக்கும் என்பதுதான்  சந்திரசேகரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், விஜய் என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்று தெரியவில்லை என்கிறது விஜய்க்கு நெருக்கமான வட்டாரம்.