சல்மான்கானுடன் மோதும் பரத்!

slider சினிமா
bharath-பரத்

இயக்குநர் ஷங்கர், தான் இயக்கிய ‘பாய்ஸ்’படத்தில் நடிகர் பரத்தை அறிமுகப்படுத்தினார். இதன்பின்னர் ‘வெயில்’, ’காதல்’,’ பழனி’, ’பட்டியல்’ , ’555’ போன்ற படங்களில்  இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரிவர ஓடாததால், பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. தற்போது இவர் கைவசம்  ‘காளிதாஸ்’ என்ற தமிழ் படமும்,  6 ஹவர்ஸ்’ என்ற மலையாள படமும் மட்டுமே உள்ளன.

இந்நிலையில்,  ‘ராதே’ என்னும் பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பரத்.  டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா இயக்கும் இந்தப் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இது குறித்து பரத் தனது ட்விட்டரில், “சல்மான் கானுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியிருக்கிறது” என்று  பதிவிட்டு, சல்மான் மற்றும் பிரபுதேவாவுடன் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

வரும் 2020-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு  ‘ராதே’ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.