காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா!

slider சினிமா
mookuthi-amman

காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த  ‘எல்.கே.ஜி.’ படம் பெரும் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர்  ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.  ‘எல்.கே.ஜி’ படம் போன்றே இப்படமும் சமூக பிரச்னையை அதிகம் பேசவுள்ளதாம்.

இப்படத்தில் படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாம் படக்குழு.  ஆர்.ஜே.பாலாஜி ஏற்கெனவே  ‘நானும் ரவுடிதான்’,’  ‘வேலைக்காரன்’ போன்ற படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார்.

‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருந்தார் என்பதும், அப்படத்தில் அவருக்கு தனியாக ஒரு பாடல் எல்லாம் கொடுக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல்  ‘மூக்குத்தி அம்மன்’ படத்திலும் நயன்தாரா இமேஜ் பார்க்காமல் நடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.    ‘மூக்குத்தி அம்மன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், சாமி படம் இல்லையென்றும் படக்குழு தெரிவித்துள்ளது.