இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி!

slider சினிமா

 

நடிகர் விஜய் சேதுபதியின் 33-வது படம் ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’.. இந்தப் படத்தை  இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கடகிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோயினாக அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக  நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப் படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.  இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி வருவதாக இயக்குநர் கூறியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந் நிலையில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ வரும் நவம்பர் 15-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.