முன்னணி ஹீரோயினாகும் சின்னத்திரை நடிகை!

slider சினிமா
Priya-Bhavani-Shankar-பிரியா பவானி சங்கர்

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும்  ‘மாஃபியா’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடித்து வருகிறார். இந்த படத்தில்  ‘சத்யா’ என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் நிறைய இருக்கிறதாம். ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தியுள்ளாராம்.

படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகலாம் என்கிறது கோடம்பாக்கத்து தகவல். மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும்  ‘இந்தியன்- 2’ படத்திலும், எஸ்.ஜெ.சூர்யாவின்  ‘பொம்மை ’ படத்திலும் பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து பிஸியாகியுள்ளார்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கரின் இத்தகைய கிடுகிடு வளர்ச்சி, கோலிவுட்டில் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.