சிம்புவின் பிரச்னை சுமூகமாக முடிந்தது!

slider சினிமா
sureshkamatchi-simpu

நடிகர் சிம்புக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் ‘மாநாடு’ படம் சம்பந்தமாக மோதல் உருவானது. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு சரியாக வராத காரணத்தால் தனக்கு பல லட்சங்கள் நஷ்டம் என்று சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் சுரேஷ் காமாட்சி புகார் அளித்தார். இதனால், சில மாதங்களுக்கு முன்பு இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும், வேறு நடிகரை வைத்து  ‘மாநாடு’ படத்தினை தொடங்கவும் தயாரிப்பாளர் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில்,    தயாரிப்பாளர் சங்கம், இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.

தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, “படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்கத் தயார்’’ என்று கூறப்பட்டது. இந்த கோரிக்கைகளை ஏற்று சிம்பு தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனையடுத்து  ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.