அதிநவீன தொழில்நுட்பத்தில் சூப்பர் ஹீரோவாக ஜெய்!

slider சினிமா
breaking news – பிரேக்கிங் நியூஸ்

சூப்பர் ஹீரோக்கள் படங்களுக்கு ஹாலிவுட்டில் மவுசு அதிகம். இந்தியாவில் பாலிவுட்டிலும் சமீபமாக சில சூப்பர் ஹீரோக்கள் கதைகள் கொண்ட படங்கள் வெளியாகின. இந்த வரிசையில் தமிழில் எடுக்கப்படும் படம் தான் ’பிரேக்கிங் நியூஸ்’. இதில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.   ‘அந்நியன், முதல்வன், சிவாஜி’ போன்ற படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் இருந்து பணியாற்றிய   அண்ட்ரோ பாண்டியன் இயக்கி வருகிறார்.

இந்த வருடத்தின் துவக்கத்தில் தொடங்கப்பட்ட இப் படத்தின் படப்பிடிப்பு இடையில் சில மாதங்கள் நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் இரண்டாம் கட்ட படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் குறித்து இயக்குனர் அண்ட்ரோ பாண்டியன், ’’ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்‌ஷன் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இப்படம் மிக  பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம். மேலும், விஷுவல் எஃபெக்ட்ஸின் பங்கு அதிகமாக உள்ளது. இதனால் பாதி படத்திற்கும் மேல் கிரீன் மற்றும் புளூ மேட்டிலேயே படமாக்கி வருகிறோம். காதல், எமோஷன், சென்டிமென்டுடன் கலந்த பக்கா கமர்சியல் படமாக எடுத்து வருகிறோம்’ என்றார்.