வசனமில்லாமல் உருவாகும்  ‘நிசப்தம்’!

slider சினிமா
actor madhavan-நடிகர் மாதவன்

நடிகர் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே  நடிப்பில் தயாராகிவரும் படம்தான்  ‘நிசப்தம்’. இதில் சில ஹாலிவுட் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். நான்கு இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீஸுக்கும் இடையே நடக்கும் க்ரைம் பின்னணி கொண்ட திகில் படமாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும்,   தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது.  இந்தப் படத்தில் தலைப்புக்கேற்ப வசனமே கிடையாது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  தற்போது இதன் டீசரை வரும் நவம்பர் 6-ம் தேதி மாலை வெளியிடவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் அனுஷ்கா ஓவியக் கலைஞராக நடித்துள்ளார். அமெரிக்காவில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

தமிழில் ஏற்கனவே  ‘நிசப்தம்’ எனும் தலைப்பில் ஒரு படம் வெளியாகியிருப்பதால், இந்தப் படத்தின் தலைப்பு மாற்றப்படலாம் என்கிற தகவலும் வந்திருக்கிறது.