நான்  செய்த தவறு – நடிகை நயன்தாரா அதிரடி பேட்டி

slider சினிமா
nayanthara – நயன்தாரா

 

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர்,  தான் நடிக்கும் படத்தின் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்து கொள்வதை விரும்பாதவர். மேலும், இவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது என்பதும் ரொம்பவும் குறைச்சல் என்றே சொல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட நயன்தாரா தற்போது தந்துள்ள ஒரு பேட்டியில், “தனது கேரியரில் செய்த மிகப்பெரிய தவறு சூர்யாவின்  ‘கஜினி’யில் நடித்ததுதான். அந்தப் படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவி கேரக்டரில் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, ஹீரோயின் அசினுக்கு இணையான வேடம் என கூறப்பட்டது. ஆனால், படத்தில் எனது கேரக்டரை வேறுவிதமாக எடுத்துவிட்டார்கள். அதற்குப் பிறகுதான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து  நடிக்கத் தொடங்கினேன்” என்று  கூறியுள்ளார்.

சமீபத்தில், ஓர் ஆங்கில இதழுக்கு நயன்தாரா கொடுத்துள்ள பேட்டி இது. நயன்தாராவின் இந்தப் பேச்சு தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  ‘கஜினி’ படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் இயக்த்தில் தற்போது, ரஜினி நடிக்கும் ’தர்பார்’ படத்திலும் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது.