பிக்பாஸுக்கு பின்பு சேரன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’!

slider சினிமா

 

ராஜாவுக்கு செக் படத்தில் இயக்குநர் சேரன்

‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் சேரன் முக்கிய பாத்திரத்தில் நடித்த ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இதில் சேரனுக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நடிகை சிருஷ்டி டாங்கே நடித்துள்ள இப்படத்தை ஜெயம் ரவி நடித்த ‘மழை’என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ் குமார்  இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சேரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர அத்தனை பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால், நிச்சயம் அந்தக் குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். என் நண்பர் எம்.எஸ்.பிரபு, கதைக்குள் அடங்குகிற கேமராமேன். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள்” என்று பேசியுள்ளார்.