பாலிவுட் பிரபலம் ஷாருக்கானை இயக்கும் அட்லீ!

slider சினிமா

 

sharukhan with atlee

நடிகர் ஆர்யா, நயன்தாரா, ஜெய் நடிக்க ‘ராஜா ராணி’படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. இவர் அடுத்த படத்தையே விஜய்யை வைத்து இயக்கினார். அப்படம் ‘தெறி’. இதனைத் தொடர்ந்து வரிசையாக விஜய்யை வைத்து  ‘மெர்சல்’,  ‘பிகில்’  படங்களை இயக்கியுள்ளார்.  ‘பிகில்’ படம் தற்போது தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இப்படி குறுகிய காலத்திலே பெரும் பிரபலமாகியுள்ள அட்லீ, இப்போது பாலிவுட் பிரபலம் ஷாருக்கானை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

atlee-sharukhan

பாலிவுட் பிரபலம் ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தான் ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட். இந் நிறுவனம் அடுத்து தயாரிக்கவுள்ள படத்தைத் தான் அட்லீ இயக்கப் போவதாக தகவல் கசிந்திருக்கிறது. ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்தப் படம் ஓர் அதிரடி ஆகஷன் படமாக இருக்குமாம். மேலும்,  தமிழ், இந்தி மொழிகளில் இப்படம், தயாராக விருக்கிறதாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.