துரோகிகளுடன் இணைய வாய்ப்பே கிடையாது – டி.டி.வி. தினகரன் அதிரடி பேச்சு!

உலகம்
ttv dinakaran-டிடிவி தினகரன்

அ.மமு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. விரைவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள். சிறையில் இருப்பவர் பேச முடியாத காரணத்தால், வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்’’ என்று பேசியிருப்பது அ.தி.மு.க. முகாமில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நிகழ்ச்சி முன்னிட்டு இன்று காலை (16.10.2019) மதுரை விமான நிலையம் வந்திறங்கினார் தினகரன். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு அவரும் பதிலளித்தார்.

  1. ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளாரே?

“மற்றவர்களை புண்படுத்தும் வகையில் சீமான் தேவையில்லாத கருத்துக்களை பேசக்கூடாது. ஒரு பிரதமராக இருந்தவரின் படுகொலை பற்றி பேசுவது சரியல்ல. தேவையில்லாத பிரச்னையை கிளப்ப வேண்டிய அவசியம் இல்லை. சீமான் பேசியதை திரும்ப பெற்றுக்கொண்டால் அவருக்கும் நல்லது. என்னைப் போன்ற அரசியல்வாதிக்கும் நல்லது.’’

  1. இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன்?

“எங்கள் கட்சிக்கு சின்னம் பெறுவதற்கான விசாரணை நாளை டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது. இதற்கு வழக்கமாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். எதிராக மனு செய்துள்ளனர். இதை முறியடித்து எங்கள் கட்சிக்கென்று தனி சின்னத்தை பெற்று  தேர்தலில் போட்டியிடுவோம். ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டேன்.  விக்கிரவாண்டி, நாங்குநேரி, வேலூர் இடைத்தேர்தல்களில் ஒவ்வொரு சின்னத்திலும் போட்டியிட முடியாது. பல சின்னங்களில் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். எனவே, கட்சிகான ஒரே சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிடுவோம்’’ என்று பதில் கூறினார்.

  1. அ.தி.மு.க.வுடன் இணைவீர்களா?

“துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. விரைவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள். சிறையில் இருப்பவர் பேச முடியாத காரணத்தால்,வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்’’ என்று பதிலளித்தார்.

 -நிமலன்