வெப் சீரியலுக்கு தாவிய ஹன்சிகா!

slider சினிமா
hansika motvani-ஹன்சிகா மோத்வானி

 

தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான  ஹன்சிகா தற்போது  நாயகிக்கு முக்கியத்துவமுள்ள  ‘மஹா’ எனும் படத்தில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி வருகிறார். இது ஹன்சிகாவுக்கு  50-வது படம்.

தமிழில் ‘மஹா’ மற்றும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா  வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தெலுங்கில் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பாகமதி’ படத்தை இயக்கிய அஷோக் இப்போது ஒரு வெப் சீரியஸ் தொடர் இயக்கவுள்ளார். இந்த வெப் தொடரில்தான் ஹன்சிகா நடிக்கவுள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.