விஜய்யின்  ‘பிகில்’ படத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறதா அரசு!

slider சினிமா
bigil-பிகில்

நடிகர் விஜய்  – அட்லீ காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘பிகில்’ ப் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியது. இந்த டிரைலர் நிகழ்ச்சியில், விஜய் பேசிய சில கருத்துக்கள் தமிழக ஆளுங் கட்சி தரப்பை கோபப்படுத்தியதாகவும், இதனால்  ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வெளியாவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாகவும் வெளியாகிவரும் தகவலால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், படக்குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவில்லை.  இதுபோக, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.  அரசியல் காரணங்களுக்காகவே படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவதில் தாமதமும், குறுக்கீடுகளும் ஏற்பட்டு வருவதாகவும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், “பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.