புத்த மதத்திற்கு மாறப் போகிறேன் – மாயாவதி அதிரடி பேச்சு!

slider அரசியல்
selvi mayavathi-செல்வி மாயாவதி

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, சமீபத்தில் புத்த மதத்திற்கு மாறப் போகிறேன் என்று பேசியிருப்பது உத்தர பிரதேசத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி. அப்போது அவர் பேசும்போது, “அண்ணல் அம்பேத்கர் கடைசிக் காலத்தில், தன் ஆதரவாளர்களுடன்  புத்த மதத்தைத் தழுவினார்.   புத்த மதத்திற்கு நான் மட்டுமின்றி இன்னும் ஆயிரக்கணக்கான மக்களுடன் மாறி தீட்சை பெறுவேன். அதற்கு சரியான காலம் வர வேண்டும். அரசியலில் நாங்கள் இருந்தாலும் அம்பேத்கரை பின்பற்றுகிறவர்களால் இத்தகைய மதமாற்றம் என்பது சாத்தியமானதுதான்’’ என்று பேசியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் இந்தப் பேச்சிற்கு உத்தரபிரதேசத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியலுக்காக மாயாவதி இவ்வாறு பேசியிருப்பதாகவும், ஒருவேளை மாயாவதி மதம் மாற முடிவு செய்தால் அவர் அரசியலில் இருந்து விலகிய பின்னரே மாறுவார் என்றும், அரசியலில் இருக்கும் வரை அவர் மதம் மாற வாய்ப்பில்லை என்றும் அங்குள்ள சமூக வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளதாக உத்தரபிரதேசத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொ.ரா.ஸ்ரீ.