சீயான் விக்ரமோடு நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

slider சினிமா
விக்ரம்-அஜய் ஞானமுத்து

இயக்குநர் அஜய் ஞானமுத்து  ‘டிமாண்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ படங்களை இதுவரை இயக்கியுள்ளார். இப்போது இவர் நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும்  இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘விக்ரம் – 58’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

irfanpathan-இர்பான்பதான்

 

ஆக்‌ஷன், திரில்லர் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரமாண்டமாக தயாரிப்பாக உருவாகி இப் படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்க இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம்  இயக்கப்பட்டு வருவதாகவும், வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.