வெளியாகிக்கொண்டே இருக்கும்  ‘தர்பார்’ படக் காட்சிகள் – அதிர்ச்சியில் படக்குழு

slider சினிமா

நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும்        ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு வெகுவேகமாக நடந்து வருகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதனால் படக்குழு மிகுந்த மன வருத்தமும் கொண்டுள்ளது என்கிற தகவலும் வெளியானது.

தர்பார் படக் காட்சி

 

இந்நிலையில் தற்போது பம்பாய் அரங்கு ஒன்றில் ‘தர்பார்’ படத் தளத்தில் ரஜினி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸுடன் நடிகை ஸ்ரேயா இருப்பது போன்ற காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.   இதை வைத்து தர்பார் படத்தில் ஸ்ரேயா சில காட்சிகளில் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவலும் பரவத் தொடங்கியது.

ஆனால், இந்தத் தகவலை  ‘தர்பார்’ படக்குழு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.  நடிகை ஸ்ரேயா மரியாதை நிமித்தமாகவே ரஜினியை சந்தித்தார் என்று பதில் மட்டுமே தந்திருக்கிறது படக்குழு. அடுத்த மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையில்  ‘தர்பார்’ திரைக்கு வரவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.

ரஜினியின்  ‘தர்பார்’ படத்தின் சில காட்சிகள் அவ்வப்போது லீக் ஆவதும், அவை சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களாக மாறுவதும்  ‘தர்பார்’ படக்குழுவினருக்கு மட்டுமல்ல, ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.