பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை வேடமா?

slider சினிமா

 தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான  மணிரத்னம் 800 கோடி பட்ஜெட்டில் இயக்கிவரும் படம் தான் ’பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தில் தமிழின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஐஸ்வர்யாராய்-aiswaryarai

 

இந்தப் படத்தின் படபிடிப்பு இப்போது வட இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இதே மத்தியபிரதேசத்தில் தனது ‘அலைபாயுதே’ படத்திற்காக மணிரத்னம் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். நடிகர் கமல்ஹாசனும்  ‘உத்தம வில்லன்’ படத்துக்காக மத்தியபிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இந்த வகையில் மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படும் மூன்றாவது தமிழ் திரைப்படம்  ‘பொன்னியின் செல்வன்’ என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும்,  இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை வேடம் என்கிற கூடுதல் தகவலும் தற்போது வெளியாகியிருக்கிறது.