நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் ஹன்சிகா!

slider சினிமா

 

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்களிடம் தற்போது ஒரு போக்கு புதிதாக சேர்ந்திருக்கிறது. அதாவது, கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகள் கொண்ட படத்தில் நடிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதுதான் அது. இதில் நடிகை நயன்தாரா ஏற்கனவே தன்னை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்துள்ளார். அவை வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்துள்ளன.

இந்த வரிசையில் திரிஷா, அமலாபால், தமன்னாவுடன் இப்போது புதிதாக சேர்ந்திருப்பவர் ஹனுஷ்கா. சில மாதமாகவே ஹன்சிகாவும் தன்னை முக்கிய ரோலாக கொண்ட கதைகளை மட்டும் கேட்டு வந்தாராம். இப்போது  அவருக்கு அப்படி ஒரு கதை கிடைத்துவிட்டது. இது ஒரு திகில் கலந்த பேய் கதை. படத்தின் பெயரும்  ‘திகில்’  என்றே வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஹரி, ஹரிஷ் என்கிற இருவர் இயக்குகின்றனர்.  இவர்கள்  ‘அம்புலி, ஜம்புலிங்கம்’ ஆகிய படங்களை எடுத்தவர்கள் ஆவர்.

இந்த  ‘திகில்’ படத்தில் இன்னொரு ஹைலைட்டும் இருக்கிறது. இதில் ஹன்சிகாவுக்கு வில்லனாக நடிப்பது இந்திய கிரிக்கெட் பிரபலம் ஸ்ரீசாந்த். இவர் ஏற்கெனவே இரண்டு பாலிவுட் படங்களிலும், ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் மூலம் தற்போது தமிழ்ப் பட உலகிலும் அறிமுகமாகிறார்.  படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கி  பள்ளி விடுமுறை காலத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாம் படக்குழு!