சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்!

slider சினிமா

 

surya-vetrimaaran

கடந்த வாரம் வெளிவந்த  ‘அசுரன்’ படம் வெற்றி மாறனுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. இந்தப் படத்துக்கு அடுத்து நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். இதற்கான ஆரம்பகட்ட வேலைகளும் நடந்து வந்த நிலையில், அசுரன் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு வெற்றிமாறன் ஒத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவைப் சந்தித்து வெற்றிமாறன் கதை கூறியதாகவும், வெற்றிமாறன் கூறிய கதை சூர்யாவுக்கு பிடித்துவிட்டதாகவும், இன்னும் தேதி மட்டும் தான் முடிவாகவில்லை என்றும்கூட தகவல் கசிந்திருக்கிறது.

வெற்றிமாறன்  ‘பொல்லாதவன்’,  ‘ஆடுகளம்’,  ‘வடசென்னை’,  ‘அசுரன்’, படங்களை தனுஷை வைத்து இயக்கியுள்ளார். இடையில் இயக்கிய  ‘விசாரணை’ படத்தில் நடிகர் தினேஷ் மற்றும் சமுத்திரக்கனி நடித்திருந்தார்கள்.