‘மங்காத்தா-2’ ரெடியாகும் வெங்கட்பிரபு!

slider சினிமா

கடந்த 2011–ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், அர்ஜுன், திரிஷா  காம்பினேஷனில் வெளிவந்த படம்  ‘மங்காத்தா’. இந்தப் படத்தில் அஜித்தின் வில்லத்தனம் கலந்த நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது.

Ajith Kumar

இதன்பிறகு அடிக்கடி இயக்குநர் வெங்கட்பிரபுவிடம்  ‘மங்காத்தா-2’ எடுக்கப்படுமா? என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு எடுக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்கிற பொருளிலே பதில் சொல்லி வந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் வெங்கட்பிரபு இது குறித்து கூறும்போது, “ ‘மங்காத்தா–2’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன். அது  ‘மங்காத்தா- 2’–ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன்’’ என்றார்.  மேலும், சில மாதங்களுக்கு முன்பு அஜித்தை நேரில் சந்தித்தும் வெங்கட்பிரபு பேசியுள்ளார்.

தற்போது   ‘மங்காத்தா- 2’–ம் பாகத்துக்கான கதையை வெங்கட் பிரபு தயார் செய்துவிட்டதாகவும்,  இந்தப் படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவரும், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும்,  இவரை சமீபத்தில் வெங்கட் பிரபுவும் சந்தித்து பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அதே படத்து இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இன்னொரு படத்தை தயாரிக்கும் பணியில் போனிகபூர் தற்போது ஈடுபட்டு உள்ளார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ‘மங்காத்தா- 2’-ம் பாகம் எடுக்கப்படலாம் என்றும் கோலிவுட் வட்டார தகவல்கள் சொல்கின்றன.