கோமாளிக்கு அடுத்து அதிரடி ஆக்‌ஷனில் ஜெயம்ரவி!

slider சினிமா

சமீபத்தில் வெளியான ’கோமாளி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, இயக்குநர் அகமத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே ‘என்றன்றும் புன்னகை’,  ‘மனிதன்’ படங்களை இயக்கியவர். இந்தப் படத்திற்கு ’ஜன கன மன’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க, நடிகை டாப்சி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி, ஆக்ஷன் கிங் அர்ஜுன், கே.ஜி.எஃப். படத்தின் வில்லன் ராம், மற்றும் நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

ஜெயம் ரவி

இப்படம் ஒரு ஆக்‌ஷன் திரில்லர் பாணியில்  எடுக்கப்படவுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் நானா படேகர் நடிக்க உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கிய ’காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

காதல் படங்களின் ஹீரோ என்று பெயர் எடுத்துள்ள ஜெயம் ரவிக்கு, இந்த ஆக்‌ஷன் படம்  பெரிய ஹிட் கொடுத்தால், இனி அதிக ஆக்‌ஷன் படங்களிலும் அவரை பார்க்கமுடியும் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாம்.