வெளுத்துக் கட்டும் யோகிபாபு

slider சினிமா

    தீபாவளி மற்றும் பொங்கலன்று தங்கள் படம் ரிலீஸானால், மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் தமிழ்ச் சினிமாவின் அத்தனை ஹீரோக்களுக்கும் உடன்பாடு உண்டு. என்றாலும், இன்றைய சினிமா மார்க்கெட்டிங்கில் இது தொடர்ந்து சாத்தியமில்லை. இந்த சாத்தியமில்லாத இடத்தை வருகின்ற தீபாவளிக்கு நான்கு மடங்காக நிரப்ப இருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு.

yogi babu-யோகிபாபு

ரஜினி, அஜித், விஜய் உள்பட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வரும் யோகிபாபு, சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். நடித்தும் வருகிறார்.

தீபாவளியை முன்னிட்டு, வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளிவரவுள்ள ‘பட்லர் பாபு’ படத்திலும்,  இயக்குநர் சுந்தர் சி-யின்  ‘இருட்டு’ படத்திலும், வருண் நடித்த  ‘பப்பி’ படத்திலும், முன்னணி நடிகை தமன்னா முக்கிய ரோலில் நடித்துள்ள  ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தலும் யோகி பாபு நடித்துள்ளார்.  இந்த நான்கு படத்திலும் இவருக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதற்குமுன்பு அதாவது யோகிபாபுக்கு முன்பு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை ரிலீஸ் படங்களில் நான்கு படங்கள் அளவுக்கு நடித்தவர் வடிவேலு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் யோகிபாபுவின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு காரணம் அவரது தோற்றமும், நடிப்பும் மட்டுமல்ல, அவரது குரலும் பெரும் பிளஸ்பாயிண்ட் ஆக இருப்பதே அவருடைய இந்த வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் திரைத்துறை ஜாம்பவான்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *