பதிலுக்குப் பதில் – கமலின் அதிரடி

slider சினிமா

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் மீது 10 கோடி ரூபாய் பண மோசடி புகார் கூறியிருந்தார் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தற்போது இதற்கு கமல் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் ஞானவேல் ராஜாவுக்கு அனுப்பியிருப்பதால், இந்த விஷயத்தில் யார் மீது தவறு என்பதை அறிய தமிழ்த் திரையுலகம் ஆவலாகிருக்கிறது.

Kamal_Haasan-கமல்ஹாசன்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடமிருந்து தன் மீதான பத்து கோடி ரூபாய் மோசடி புகார் வந்தவுடனே இது குறித்து கமல்ஹாசன் சார்பாக அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கமல்ஹாசனுக்கும், ஞானவேல்ராஜாவுக்கும் இந்த விஷயத்தில்  எந்த தொடர்பும் இல்லை. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கமல்ஹாசனுக்கு, ஞானவேல்ராஜா எந்த பணமும் வழங்கவில்லை. அவருக்கும் கமலுக்கும் எந்த வி‌ஷயத்திலும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை இருந்தது இல்லை. கமலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஞானவேல் ராஜா புகார் அளித்து இருக்கிறார். இவ்விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கம் அளித்திருந்தனர்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

இந்நிலையில் இப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், “கடந்த சில நாட்களாக நீங்கள் (ஞானவேல்ராஜா) கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கிறது. கமல்ஹாசன் ரூ.10 கோடி வாங்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். நீங்கள் கூறுவதை நாங்கள் மறுக்கிறோம். உங்களது தயாரிப்பு நிறுவனத்துக்கு கமல்ஹாசன் படம் நடித்து தருவதாக உறுதி அளித்தார் என்பதில் துளிகூட உண்மையில்லை. கமல்ஹாசனுக்கு நீங்கள் ரூ.10 கோடி அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் உங்களுக்கு படம் நடித்து கொடுப்பதாக கமல்ஹாசன் உறுதி அளித்ததாக நீங்கள் கூறுவதற்கான ஆதார விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு வலியுறுத்துகிறோம். அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் நீங்கள் அளித்த புகாரை வாபஸ் பெற்று அது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதனை நீங்கள் செய்ய தவறும்பட்சத்தில் உங்கள் மீது ராஜ்கமல் பிலிம் நிறுவனம் சிவில் மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் அனுமார் வால்போல் நீளமாகும் என்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *