ஓரம்போ… ஓரம்போ…! எல்.கே.சுதீஷ்க்கு ரெட் அலர்ட் கொடுக்கும் தே.மு.தி.க

slider அரசியல்

2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடபெற்ற அத்தனை தேர்தல்களிலும் படுதோல்வி கண்டு வருகிறது தே.மு.தி.க. இதற்கு கட்சியின் தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை நலிவுற்றதும் ஒரு காரணம். இந்தத் தோல்விகளை உடைத்தெறிந்து மீண்டும் வெற்றியைக் குவிக்க தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த் புது முடிவுகளை ஒவ்வொன்றாக எடுத்து வருவதாக, தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

lk sudeesh-எல்.கே.சுதீஷ்

இதன்படி, கட்சியின் இளைஞரணிச் செயலாளராக  இருந்துவந்த தனது  மச்சான் எல்.கே.சுதீஷிடமிருந்து அந்தப் பதவியை பறித்து, தனது மகன் விஜய பிரபாரகனிடம் ஒப்படைத்துள்ளார் விஜயகாந்த்.  இந்த மாற்றத்துக்கான அறிகுறி சமீபத்தில் நடைபெற்ற திருப்பூர் மாநில மாநாட்டிலே தெரியத் தொடங்கிவிட்டது.

vijaya prabhakaran-விஜய பிரபாகரன்

மேலும்,   கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தே.மு.தி.க. சார்பில் கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியவர் எல்.கே.சுதீஷ்.  இதிலும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.. இதற்கு உதாரணம், கடந்த வாரம் விஜயகாந்தை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்ற தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோரை விஜய பிரபாகரன் தான் வரவேற்றார். முன்பெல்லாம், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க எந்த கட்சி தலைவர் வந்தாலும் அவரை வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் செல்பவர் விஜயகாந்த் மச்சான் எல்.கே.சுதீஷ் என்பது கவனிக்கத்தக்கது.

இப்படியான மாற்றங்கள் இன்னும் கட்சியின் மாநில, மாவட்ட அளவிலும், நகர, ஒன்றிய அளவிலும் நடக்கவுள்ளது. “இனி, கேப்டனின் மகன் விஜய பிரபாகரனை வைத்து பல கூட்டங்கள் நடத்துவோம். அவரை வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வலுவான தொகுதியில் நிற்கவைத்து எம்.எல்.ஏ.வாக்கி சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்போம்” என்கிற முடிவும் எடுக்கப்பட்டிருப்பதாக தே.மு.தி.க.வின் தலைமைக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

-எம்.டி.ஆர்.ஸ்ரீதர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *