விஜய் – விஜய் சேதுபதி உச்சகட்ட மோதல்

slider சினிமா

நடிகர் விஜய் ‘பிகில்” படத்துக்குப் பிறகு, தனது 64-வது படத்தினை இயக்கும் வாய்ப்பை ‘மாநகரம்’ படத்தை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு வழங்கியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. இப்படம்  2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் முன்பு வெளியாகியிருந்தது. இது தொடர்பாக படத்தின் இயக்குநர் விஜய் சேதுபதியை அணுகியதாகவும் கூறப்பட்டது.

vijay-vijay sethupathy

ஆனால், தனக்கு பிஸியான கால்ஷீட்டை இருப்பதால், அதனை சரிபார்த்து சொல்வதாக விஜய் சேதுபதி சொல்லியிருந்தாராம். தற்போது விஜய் சேதுபதி  இப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில் விஜய் சேதுபதி இப்படத்தின் படப்பிடிப்பில் இணைவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் விஜய் ரசிகர்களை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக  ‘பேட்ட’ திரைப்படத்தில்  விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *