சூர்யாவை பாராட்டும் விவசாயிகள்!

slider சினிமா

நடிகர் சூர்யாவின் நடிப்பிலும், கே.வி. ஆனந்த் இயக்கத்திலும் உருவாகியுள்ள ‘காப்பான்’ படம் ரிலீஸாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகள் தரப்பிலும், விவசாயிகள் அமைப்புகளிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சூர்யா மற்றும் கே.வி.ஆனந்தை பாராட்டிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள்

இந்தப் படத்தின் மூலம் கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, கார்ப்பரேட் நிறுவனங்களின் சதி வலைகளை  தோலுரித்து ‘காப்பான்’ படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது. விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறை உருவாகியுள்ள  ‘காப்பான்’ படத்தில் முக்கிய பங்களிப்பு செய்த நடிகர் சூர்யாவையும், இயக்குநர் கே.வி.ஆனந்தையும், சமீபத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்  உள்ளிட்ட விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து  விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து, பாராட்டியும் உள்ளனர்.

 

அப்போது சூர்யாவிடம், கே.வி.ஆனந்திடமும், “விவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்து தொடர்ந்து போராடும் தங்களுக்கு  ‘காப்பான்’ படம் மூலமாக மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் நீங்கள் இருவரும் ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும், பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடவும் அழைப்பும் விடுத்துள்ளனர்.

 -தென்னாடன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *