கமல் மீது பண மோசடி குற்றச்சாட்டு!

slider சினிமா

        

kamal-gnanavel raja

நடிகர் கமல்ஹாசன் இப்போது நடிகர் மட்டுமல்ல, அரசியலில் இறங்கி மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். அதேநேரத்தில்  ‘இந்தியன் – 2’ படத்தில் நடித்தும் வருகிறார். அடுத்து ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்கவும் உள்ளார். இந்நிலையில்,  தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,  தயாரிப்பாளர் சங்கத்தில் கமல் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறுகையில், “கடந்த 2015-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான  ‘உத்தமவில்லன்’ படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன்  என்னை அணுகினார்.  எங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றார். இது நடந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை  எங்கள் நிறுவனத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை. மேலும், என்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பியும் தரவில்லை. என்னால் தரப்பட்ட 10 கோடி பணத்தை கமலிடமிருந்து திரும்ப பெற்றுத் தரச் சொல்லியே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பெரும் பிரபலமும், இப்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் கமல் மீது, தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா, “என்னிடம் கமல் 10 கோடியை பெற்றுக் கொண்டு படமாகவும் நடித்துக் கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை’’ என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியதோடு அல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரம்  ‘இந்தியன் -2’ படம் வெளியீட்டையும் பாதிக்கக்கூடிய ஒன்று என்பதால் விரைவில் இது சம்பந்தமாக இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சுமூகமாக முடிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

 பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *