’எம்.ஜி.ஆர். மகன்’ தலைப்புக்கு சிக்கல் வருமோ?

slider சினிமா

 

MGR Magan-எம்.ஜி.ஆர் மகன் பட பூஜை

சிவகார்த்திகேயன் நடித்த  ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படங்களை இயக்கியவர் பொன்.ராம். அவர் இப்போது நடிகர் சசிகுமாரை வைத்து ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்கிற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் சமீபத்தில் தேனியில் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பே பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

‘எம்.ஜி.ஆர். மகன்’ படத்தில் சசிகுமாருடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.  கதை, திரைக்கதை, வசனத்துடன் இயக்கவும் செய்கிறார் பொன்.ராம்.

இந்தப் படத்தின் தலைப்பு பலரின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், எந்த ரூபத்திலிருந்தாவது சிக்கல்களும், இடையூறுகளும் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று திரைத்துறைச் சார்ந்த பெரும்புள்ளிகள் மத்தியில் பேசப்படுகிறது.

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *