சூர்யா, ஆர்யா மீண்டும் இணைகிறார்கள்

slider சினிமா
surya-arya

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சூர்யாவும், ஆர்யாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’ போன்ற படங்களில் ஆர்யாவும், ’பிதாமகன்’, ’நந்தா’ ஆகிய படங்களில் சூர்யாவும் நடித்துள்ளனர். தற்போது இருவரும் பாலாவின் இயக்கத்தில் ஒரே படத்தில் முதன்முதலாக இணைந்து நடிக்கவுள்ளதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

BALA-DIRECTOR -இயக்குநர் பாலா

நடிகர் விக்ரமின் மகன் துருவை வைத்து  பாலா இயக்கி வந்த ’வர்மா படத்திலிருந்து பாலா விலக நேர்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாலா இயக்கவுள்ள இந்தப் படத்தில் சூர்யாவும், ஆர்யாவும் இணைந்து நடிக்கவுள்ளதால் இந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்கிற பேச்சு கோலிவுட்டில் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது.

தென்னாடன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *