கமல் படத்தில் வடிவேலு!

slider சினிமா
thalaivan irukiran-தலைவன் இருக்கிறான்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்த சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதில் ஒரு படமான  ‘இந்தியன் -2’ வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது. இன்னொரு படமான  ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை பற்றி கொஞ்சநாளாக எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாம்.

vadivelu வடிவேலு

தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கப்படவுள்ள  ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு முக்கிய கதாபாத்திரமாம். அமீர் கானை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவகிறதாம். இதில் கமல் இரட்டை வேடங்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது, படத்தின் கதாநாயகன், வில்லன் என  இரண்டு வேடங்களுமே கமல்ஹாசன் தானாம்.  ‘அமைதிப்படை’ பட பாணியில் இந்த வேடங்கள் இருக்கலாம் என்றும், இல்லை.. இல்லை..  ‘தலைவன் இருக்கின்றான்’ படம் ஒரு சீரியஸான அரசியல் கதை என்றும் பலவித பேச்சுக்கள் நிலவுகிறது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். மேலும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார்.

 பாலமுருகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *