அடுத்து ஜூனியர் என்.டி.ஆரை இயக்குகிறார் அட்லி!

slider சினிமா
DIRECTOR ATLEE-இயக்குநர் அட்லீ

 

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ படம் முடிவடைந்து வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இந்தப் படத்துக்கு அடுத்து அட்லி ஒரு தெலுங்கு படம் இயக்கவுள்ளதாகவும், அதில் ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

JUNIOR NTR-ஜூனியர் என்டிஆர்

சில தினங்களுக்கு முன்பு  ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்து அட்லி கதை சொன்னதாகவும், அந்தக் கதை அவருக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகவிருக்கிறதாம். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அடுத்து அட்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்கவுள்ளாராம்.

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *