ஹாலிவுட் படத்தில் ஜி.வி.பிரகாஷ்!

slider சினிமா
gv prakashy – ஜிவி.பிரகாஷ்

தமிழில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டைச் சேர்ந்த இயக்குநர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு  ‘டிராப் சிட்டி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. கைபா என்னும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக டெல் கணேசன் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் நடிகர் நெப்போலியன் நடித்த ‘டெவில்ஸ் நைட்’ ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர். இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் குறித்த அதிகபட்ச தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘100 % காதல்’ ‘அடங்காதே’ ‘ஜெயில்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. ’பேச்சிலர்’, ’ஆயிரம் ஜென்மங்கள்’, ’காதலிக்க யாருமில்லை’ ஆகிய படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். மேலும், தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அசுரன்’ சூர்யா – சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் ‘சூரரை போற்று ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *